×

பாளை தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னீர்பள்ளத்தில் திமுக அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஹெலன் டேவிட்சன், தங்கபாண்டியன் பங்கேற்பு

நெல்லை, மே 8: பாளை தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னீர்பள்ளத்தில் நடந்த திமுக அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மகளிர் அணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன், யூனியன் சேர்மன் கேஎஸ் தங்கபாண்டியன் பங்கேற்றுப் பேசினர்.முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திமுக தலைமைக்கழக அறிவிப்பின் படி பாளை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முன்னீர்பள்ளம் கலைஞர் திடல் நேற்று (7ம் தேதி) இரவு 7 மணிக்கு நடந்தது. கூட்டத்திற்கு பாளை தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், யூனியன் சேர்மனுமான கே.எஸ். தங்கபாண்டியன் தலைமை வகித்தார்.
பாளை மத்திய ஒன்றியச் செயலாளர் போர்வெல் கணேசன், பாளை யூனியன் துணை சேர்மன் முரளிதரன், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், முன்னிலை வகித்தனர். பாளை தெற்கு ஒன்றிய பொருளாளரும், யூனியன் கவுன்சிலருமான செல்வசங்கர், துணைச்செயலாளர் கண்ணன், இ.பி. நடராஜன் வரவேற்றனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற மகளிர் அணி மாநில செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஹெலன் டேவிட்சன் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் பாளை ெதற்கு ஒன்றிய அவைத்தலைவர் நம்பி ரெட்டியார், மத்திய ஒன்றிய அவைத்தலைவர் நாராயணன் நாடார், ஒன்றிய துணைச்செயலாளர்கள் செல்லத்துரை, சுரேஷ், கிருஷ்ணவேணி, அனுராதா ரவிமுருகன், செட்டிக்குளம் பஞ். துணைத்தலைவர் காந்தி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு பிரதிநிதிகள், ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர், திமுக முன்னோடிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.சிவந்திபட்டி இசக்கி பாண்டி நன்றி கூறினார்.

The post பாளை தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னீர்பள்ளத்தில் திமுக அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஹெலன் டேவிட்சன், தங்கபாண்டியன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Helen Davidson ,Thangapandian ,DMK government ,Munneerpallam ,Palai South Union ,Nellai ,Dinakaran ,
× RELATED திமுக ஆட்சி பொறுப்பேற்று 4ம் ஆண்டில்...